Home » Archives by category » இந்தியா

ஐஸ்க்ரீம் சாப்பிட்ட குழந்தைகள் பரிதாப பலி!

தெருவில் விற்கப்படும் ஐஸ்க்ரீமை வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் பலியான சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே பெட்டஹள்ளி கிராமத்தில் பிரசன்னா என்பவரும், அவரது மனைவி பூஜாவும் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திரிசூல், திரிஷா என ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன் தினம் அப்பகுதியில் தெருவில் ஐஸ்க்ரீம் விற்று வந்தவரிடம் குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்துள்ளனர். ஐஸ்க்ரீம் சாப்பிட்டு சில மணி நேரங்களில் குழந்தைகளின் உடல்நிலை மோசமாக தொடங்கியுள்ளது, உடனடியாக […]

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் கலவரம்!

Comments Off on வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் கலவரம்!

மணிப்பூரில் இன்று மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலை முதலே தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூரில் கடந்த ஒரு ஆண்டு காலமாக வன்முறை நிகழ்ந்து வருவதால் கூடுதல் பாதுகாப்புடன் அங்கு காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் உள் மணிப்பூரின் 15 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் […]

Continue reading …

வாக்குப்பதிவுக்கான விளக்கமளித்த தேர்தல் ஆணையம்!

Comments Off on வாக்குப்பதிவுக்கான விளக்கமளித்த தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையம் கேரள மாநிலத்தின் காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், “கண்ட்ரோல் யூனிட் வாக்குப்பதிவு இயந்திரத்தில் என்ன வாக்கு பதிவாகிறது என்பதை பதிவு செய்து அதனை ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திற்கு அனுப்பி நகலெடுக்க உத்தரவிடும், அந்த நகல் கண்ணாடி வழியாக 7 நொடிகளுக்கு வாக்காளர்களுக்கு தெரிந்த பின் கத்தரிக்கப்பட்டு ஒப்புக்கை சீட்டு இயந்திரத்தில் விழும், […]

Continue reading …

ஜே.பி.நட்டா பேச்சு!

Comments Off on ஜே.பி.நட்டா பேச்சு!

பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று பிரதமர் நரேந்திர மோடி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று மாலை முசிறியில், பெரம்பலூர் பாராளுமன்ற […]

Continue reading …

ராகுல் காந்தியின் திட்டம்!

Comments Off on ராகுல் காந்தியின் திட்டம்!

ராகுல் காந்தி இந்தியா கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சி கூட தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியின் சார்பில் ஒரு பொது தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் ராகுல் காந்தி இது குறித்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் […]

Continue reading …

கவிதா ஆவேசம்!

Comments Off on கவிதா ஆவேசம்!

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் “இது சிபிஐ கஸ்டடி அல்ல பாஜக கஸ்டடி” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார். கவிதா கடந்த மார்ச் 15ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட காவலில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் அவர் டில்லி திகார் திரையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று மீண்டும் அவர் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருடைய காவல் ஏப்ரல் […]

Continue reading …

2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கம்!

Comments Off on 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கம்!

ஒரே மாதத்தில் 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் தளம் நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. எக்ஸ் தளத்தின் மாதாந்திர அறிக்கையில் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 2.13 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சட்ட விரோத செய்திகள் பரப்புதல், பாலியல் காணொளிகளை பரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேலான இந்தியர்களின் கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசிடம் எக்ஸ் தளம் குற்றம் […]

Continue reading …

கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு!

Comments Off on கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு!

ஏப்ரல் 23ம் தேதி வரை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டித்து டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் இருந்தார். இது தொடர்பாக அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் […]

Continue reading …

பறக்கும் படை சோதனையில் வரலாறு காணாத பணம் பறிமுதல்!

Comments Off on பறக்கும் படை சோதனையில் வரலாறு காணாத பணம் பறிமுதல்!

தேர்தல் ஆணையம் நாடு முழுதும் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை பறக்கும் படை சோதனையில் சுமார் ரூ.4,658 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 1-ம் தேதி தேர்தல் நிறைவடைந்து, ஜூன் […]

Continue reading …

அமித் ஷா ‘ரோடு ஷோ’!

Comments Off on அமித் ஷா ‘ரோடு ஷோ’!

மத்திய அமைச்சர் அமித் ஷா கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து தக்கலையில் ரோடு ஷோ மேற்கொண்டார். மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு மத்தியில் தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தேசிய தலைவர்கள் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழகத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Continue reading …
Page 1 of 157123Next ›Last »