அஜித்துடன் இணையும் ஆதி!

Filed under: சினிமா |

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித் நடித்துவரும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இத்திரைப்படத்தில் ஏற்கனவே மஞ்சு வாரியர் ஜான் கொகைன் உட்பட ஒருசிலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இளம் தமிழ் ஹீரோக்களில் ஒருவரும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் ஆதி ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று வைரலானதை அடுத்து அஜித் 61 படத்தில் ஆதி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு சில தமிழ் தெலுங்கு படங்களில் வில்லனாக ஆதி நடித்துள்ள நிலையில் ஒரு வேளை அஜித் 61 படத்தில் வில்லன் ஆதியா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.