அண்ணனை மிஞ்சிய சகோதரி மீண்டும் வடகொரியா…!

Filed under: Uncategory,உலகம் |

கிம் ஜாங்-உனின் சகோதரி கிம் யோ-ஜாங் புதன்கிழமை தென் கொரிய வெளியுறவு மந்திரி காங் கியுங்-வா-விற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காரணம் வேறொன்றுமில்லை. வட கொரியா தங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என கூறி வருகிறது. அது குறித்து தென்கொரொயா சந்தேகம் எழுப்பியுள்ளது.

தென் கொரிய வெளியுறவு மந்திரி காங் கியுங்-வா சென்ற வார இறுதியில், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலே இல்லை என்ற வட கொரியாவின் கூற்றை நம்புவது கடினம் என்று கூறினார். தொற்றுநோயை கூட்டாக சமாளிக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என தென் கொரியா விடுத்த கோரிக்கைக்கும் வட கொரியா பதிலளிக்கவில்லை என்று தென் கொரொய வெளியுறவு அமைச்சர் மேலும் கூறினார்.

வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் (Kim Jong Un) அவர்களின் சகோதரி கிம் யோ ஜாங், அரசு இதற்கு, தென் கொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“வட மற்றும் தென் கொரியா இடையே ஏற்கனவே உறவுகள் மோசமாக இருக்கும் இந்நிலையில் அதன் விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் , தென்கொரிய அமைச்சர் பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளார்,” என்று அவர் கூறினார்.

“அவர்டைய உண்மையான நோக்கம் மிகவும் தெளிவாக உள்ளது, அவருடைய வார்த்தைகளை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம், அதற்காக அவர்கள் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று கிம் யோ ஜாங் (Kim Yo Jong) மிரட்டியுள்ளார்.

வட கொரியா இவ்வாறு கூறினாலும், உண்மையில், அங்கே அவசர நிலை இருப்பதாக அவ்வப்போது கூறும் ஊடகங்கள், அதன் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றன. மேலும் அங்கு பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடகொரிய, தனது உற்ற நட்பு நாடாக உள்ள சீனாவுடனான (China) வடக்கு எல்லை மூடியுள்ளது. கடந்த கோடை காலத்தில் தொற்றுநோய், இயற்கை பேரழிவுகள் மற்றும் அதன் அணுசக்தி திட்டத்தின் மீது தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான பொருளாதாரத் தடைகள் ஆகியவை காரணமாக பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வட கொரியா முன்னதாக ஒப்புக் கொண்டுள்ளது.

மிக பலவீனமான சுகாதார வசதிகள் கொண்ட வட கொரியாவில் மிகப்பெரிய அளவில் தொற்று நோய் பரவினால், மிகவும் பேரழிவு ஏற்படும் என்று நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.