அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு?

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜக தமிழ்நாட்டின் தலைவராக கடந்த 2021ம் ஆண்டு அண்ணாமலை தேசியத்தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் நியமிப்பட்டார்.

தற்போது, பாஜக ஆளுங்கட்சிக்கு எதிராக பல புகார்கள், விமர்சனங்களும் தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலலைக்கு மதத்தலைவர்கள் மற்றும், மாயோயிஸ்டுகளிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாக உளவுத்துறை கூறியதாகவும், இதையடுத்து, ஒய் பிரிவிலுள்ள அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த இசட் பாதுகாப்பு பிரிவில் 33 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபவர் என்று கூறப்படுகிறது.