அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்குமா அதிமுக?

Filed under: அரசியல் |

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இக்கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு குறித்த தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது. இத்தீர்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இக்கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த யாரும் பங்கேற்க போவதில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.