அமெரிக்காவில் கோவையைச் சேர்ந்த 4 பேர் பலி!

Filed under: உலகம் |

கோவையைச் சேர்ந்த தம்பதியர் அமெரிக்காவில் வசிக்கும் மகன்களை பார்க்க சென்ற போது அங்கு நடந்த கார் விபத்தில் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டத்தில் வசித்து வந்த நாகராஜன் (53), இவர் தேனியைப் பூர்விகமாகக் கொண்ட இவர் கோவையில் செட்டிலாகிவிட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி; இந்த தம்பதியர்க்கு, ஹதீஸ் (24)ம், தினேஷ் (23) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இரு மகன்களைப் பார்க்க, அமெரிக்காவுக்குச் சென்ற நாகராஜன் மற்றும்- விஜயலட்சுமி தம்பதியர், அரிசோனா பகுதியில் நடந்த கார் விபத்தில் சிக்கினர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் பலியாகினர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.