நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்த அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்தேன். இந்த விளையாட்டுப் போட்டி துவக்க விழாவுக்கு வருகை தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து அழைப்பிதழை தந்தேன். முதலமைச்சரின் சார்பில் வழங்கப்பட்ட அழைப்பு கடிதத்தையும் பிரதமரிடம் கொடுத்தேன். திருச்சியில் நடந்த விழாவின்போது முதலமைச்சர் வைத்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்” என்று கூறினார். அதன் பின்னர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் அவரது பாதயாத்திரைக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறிய உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வெள்ளம் குறித்து நிலவரங்களை ராகுல் காந்தி கேட்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.