அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நம்பிக்கை!

Filed under: அரசியல்,தமிழகம் |

மா.சுப்பிரமணியன் 2023ம் ஆண்டு நீட் தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். நீட் தேர்வு குறித்த மத்திய அரசின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தினாலும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் அதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.