அரசியலுக்கு வர போகிறேனா என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் விளக்கம் !!!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று தோற்றங்களில் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் ‘பிஸ்கோத்’. அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா என இரு நடிகைகள் நடித்துள்ளனர் இவர்களுடன் ஆனந்தராஜ் , மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட காமெடி கூட்டமே களம்இறங்கியுள்ளது .

இந்நிலையில் சந்தானம் நடித்த திரைப்படம் தீவாளிக்கு திரையரங்கில் வெளியானதை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள கமலா திரையரங்கத்திற்கு சந்தானம் வருகை தந்தார், அப்போது திரையரங்கிற்கு வந்து திரைப்படத்தை பார்வையிட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தார்? அப்போது செய்தியாளர் ஒருவர் நீங்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வருகிறதே என கேள்வி எழுப்ப..,

அதனை சந்தானம் மறுத்துவிட்டார், நான் அரசியலுக்கு வருவது என்பது ‘பிஸ்கோத்’ திரைப்படத்தை விட காமெடியாக உள்ளது என்று கூறிய நடிகர் சந்தானம் தான் எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை என விளக்கம் அளித்தார். மேலும் நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய முடியும் எனவும் சந்தானம் தெரிவித்தார்.

நடிகர் சந்தானம் அரசியல் வாரிசுக்கு நெருக்கமான நடிகராக அறியப்பட்டாலும் வாரிசு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடிக்க சந்தானம் மறுப்பு தெரிவித்ததாகவும் அதனை தொடர்ந்து சில தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் சந்தானத்தை புறக்கணித்ததாகவும், இதை அடுத்து தானே ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தை சந்தானமே முழு செலவில் தயாரித்து வருடத்திற்கு இரண்டு என்ற ரீதியில் சந்தானம் திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.