அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

Filed under: தமிழகம் |

மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சிறை செல்ல நேரிடும் என அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதே போல் திருச்சி கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு கொடுக்க அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது. தருமபுரி ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் நிலங்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.