ஆடியோ வெளியீட்டுக்கு இத்தனைக் கோடியா?

Filed under: சினிமா |

“தி லெஜண்ட்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதையடுத்து இணையத்தில் வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் டிரெயிலர் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரெயிலரின் பிரம்மாண்டத்தைப் பார்க்கும் ஒரு புதுமுக நடிகருக்கு இவ்வளவு செலவு செய்து படம் எடுத்துள்ளார்களா ரசிகர்கள் மனதில் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்காக மட்டும் சுமார் 6 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாக கோலிவுட்டே ஆச்சரியத்தில் உள்ளது. நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள வந்த நடிகைகள் அனைவருக்கும் கணிசமான தொகை கொடுத்தே வரவழைக்கப்பட்டுள்ளார்களாம். இதனால்தான் கோடிக்கணக்கில் காலியாகி உள்ளது.