ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு கொரோனா!

Filed under: இந்தியா |

ஆந்திராவில் குவைத்திலிருந்து வந்த இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டள்ளது. அதனால் அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. இந்தியாவிலும் படிப்படியாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை பார்த்து விட்டு கடந்த 19ம் தேதி ஆந்திரா திரும்பினார். அப்போது அவருக்கு பரிசோதனை செய்தபோது புதிய வகை கொரோனா வைரஸ் அதாவது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து அப்பெண்ணையும் அவருடைய குடும்பத்தாரையும் ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வருவதாகவும் அந்த இளம் பெண்ணுடன் வேறு யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.