ஆப்பிள் நிறுவனத்தின் சாதனை!

Filed under: இந்தியா |

ஆப்பிள் நிறுவனம் ஒரே மாதத்தில் இந்தியாவில் 8100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.


கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் முதல் முறையாக ஐபோன் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் மட்டும் தயாரிக்கப்பட்ட ஐபோன்களின் மதிப்பு ரூபாய் 8100 கோடி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மாதத்தில் மட்டும் ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கு மேல் செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 8,100 கோடிக்கு ஐபோன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 2025ம் ஆண்டு உலகில் பயன்படுத்தப்படும் ஐபோன்களில் 25 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்றும் 2027ம் ஆண்டு உலகில் பயன்படுத்தப்படும் ஐபோன்களில் இரண்டில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.