ஆர்.எஸ்.பாரதி, எல்.முருகனுக்கு எச்சரிக்கை!

Filed under: தமிழகம் |

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இளையராஜா விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருப்பதாக மத்திய அமைச்சர் எல் முருகன், இந்த விவகாரத்தில் திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த நிலையில் இளையராஜா விவகாரத்தில் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும் திமுக மீது அவதூறு பரப்பும் நோக்கத்தை நிறுத்தி கொள்ளாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.