ஆளுநரை சந்திக்கும் அமைச்சர் ரகுபதி!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் ரகுபதி ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக ஆளுநரை நாளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்சமீபத்தில் தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை ஆளுநரை அமைச்சர் ரகுபதி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென சட்டத்துறை அமைச்சர் கவர்னரிடம் நேரில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.