ஆஸ்காருக்கு தகுதிபெற்ற “காந்தாரா”!

Filed under: சினிமா |

இயக்குனர் ரிஷப் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், ஆஸ்கர் விருதுக்கான 2 தகுதிகளைப் “காந்தாரா” திரைப்படம் பெற்றுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

“கேஜிஎப்- 1 & 2 ஆகிய திரைப்படங்களுக்குப் பின் கன்னட சினிமா மீது சினிமா மீது உலக ரசிகர்கள் பார்வை குவிந்தது. பல வித்தியாசமான படங்களை கொடுக்கும் கன்னட சினிமாவில் சமீபத்தில் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் “காந்தாரா.” படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி கன்னடமொழியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலை குவித்து வருகிறது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்தார். ஆர்.ஆர்.ஆர் படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அதில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டுக்குத்து பாடல் இப்பட்டியலில் உள்ள நிலையில், தற்போது காந்தாரா படமும் ஆஸ்கருக்கு 2 தகுதிகள் பெற்றுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் கூறியுள்ளார்.