இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடராஜனுக்கு வாய்ப்பு!

Filed under: விளையாட்டு |

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடராஜனுக்கு வாய்ப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் தமிழக வீரரான நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. மேலும் டி20 தொடரில் 2-2 கணக்கில் சமனில் உள்ளது நாளை (20-03-2021) இறுதி டி20 போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நிறுவனம் அறிவித்துள்ளது.

இத்தொடரின் கேப்டனாக விராட் கோலி மற்றும் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நீடிப்பர். இத்தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ‘யாக்கர்’ நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பவர் பிளேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இத்தொடரில் இடம் பெற்றுள்ளார்.

வீரர்கள் பட்டியல்

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், சுப்மன் கில், ஷிரேயாஸ் ஐயர், சூர்யக்குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், கே.எல். ராகுல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குர்னல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், டி. நடராஜன், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *