இங்கிலாந்து கடற்படை தளபதியான ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ

Filed under: சினிமா |

லண்டன், செப் 24:

ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகரான டேனியல் க்ரெய்க், இங்கிலாந்து கடற்படையில், கவுரவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹாலிவுட் திரையுலகத்தில், பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் டேனிடல் க்ரெய்க்.

கடந்த 2006ம் ஆண்டு முதல், இந்த கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் டேனியல் க்ரெய்க் இதுவரை கெசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அளவுக்கு இவரின் நடிப்பு இருக்கும் என்பதால், இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.

இவர் கடைசியாக நடித்த ஜேம்ஸ் பாண்ட் படமான “நோ டைம் டூ டை” திரைப்படம், இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுவே தனது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என டேனியல் க்ரெய்க் சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், அவரை கவுரவிக்கும் விதமாக, இங்கிலாந்து கடற்படையில் அவருக்கு கவுரவ படைத்தளபதி பதவி வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கப்பற்படை உடையில் டேனியல் க்ரெய்க் இருக்கும் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.