இசைஞானி பிரதமருக்கு புகழாரம்!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

இசைஞானி இளையராஜா பாரத பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருக்கு நிகரானவர் என்று புகர்ந்துள்ளார். ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளைப் பெற்றுள்ளார் இசைஞானி இளையராஜா.

சமீபத்தில் மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தத புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இசைஞானி, “இந்தியா தற்போது, கல்வித்துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது. குழந்தைகளைக் காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மற்றும் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுத்தியுள்ள இதனை அம்பேத்கர் பார்த்திருந்தால் அவர் பெருமப்படுவார். இருவரும் இந்தியா பற்றி பெரியதாக கனவு கண்டவர்கள், செயலின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்” என புகந்து பேசியுள்ளார்.