இசைப்புயல் தந்த அப்டேட்!

Filed under: சினிமா |

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் பின்னணி இசையைப் பற்றி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

மணிரத்னத்தின் கனவுப் படமான “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இரு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார் உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இப்போது செப்டம்பர் 30ம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் ஆடியோ உரிமையை இப்போது டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். இதுவரை இதுவரை இல்லாத தொகையாக சுமார் 20 கோடி ரூபாய்க்கு இரண்டு பாகங்களின் அனைத்து மொழிப் பாடல்களின் உரிமையும் விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புக்காக வித்தியாசமான இசைக்கருவிகளை இசைக்கலைஞர்கள் வாசிக்கும் புகைப்படங்களை ரஹ்மான் தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.