இசையமைப்பாளராகும் இயக்குனர் மிஷ்கின்!

Filed under: சினிமா |

இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அதோடு ‘நான் நாவலைப் படமாக்க மாட்டேன்’ என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது “பிசாசு 2” படத்தை இயக்கி வருகிறார். மிஷ்கினின் படங்களில் எப்போதும் பின்னணி இசையும் பாடல்களும் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. அது இளையராஜா இசையமைத்ததாக இருந்தாலும், அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. அந்தளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவர் மிஷ்கின். அவர், தனது தம்பி அதித்யா இயக்கும் புதிய திரைப்படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் “நான் எப்போதுமே நாவலைப் படமாக்கப் போவதில்லை. நாவல் என்பது பெரிய வடிவம். திரைக்கதை என்பது அதிலிருந்து வித்தியாசமான ஊடகம். இயக்குனர் வெற்றிமாறன் எல்லாம் சிறப்பாக நாவலைப் படமாக்குகிறார். ஆனால் என்னுடைய நிலைப்பாடு காரணமாக நான் எந்தவொரு நாவலையும் படமாக்கப் போவதில்லை” எனக் கூறியுள்ளார்.