இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட புகைப்படம்!

Filed under: சினிமா |

“வாரிசு” திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை படத்தில் இடம்பெற்றுள்ள “ரஞ்சிதமே” பாடல் வெளியானது. இப்பாடலை தமன் இசையில் விஜய் பாடியுள்ளார். பாடலுக்கான புரோமோ இரு தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது விஜய்யோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இசையமைப்பாளர் தமன் “இன்றுதான் எனக்கு தீபாவளி.. பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.