இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல்!

Filed under: இந்தியா |

இந்திய தேர்தல் ஆணையம் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி எப்போது? என்பது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளது.

குஜராத் மாநில சட்டசபை வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் அதற்கு முன்னரே தேர்தல் நடைபெற வேண்டும். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் அல்லது நவம்பர் இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்க உள்ளது. ஏற்கனவே டில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி குஜராத்திலும் ஆட்சியை பிடிக்குமா அல்லது வழக்கம்போல் பாஜக ஆட்சியை மீண்டும் கைப்பற்றுமா என்பதை தேர்தலுக்கு பின்தான் பார்க்க வேண்டும்.