இன்று முதல் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கம்

Filed under: Uncategory,இந்தியா,தமிழகம் |

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வால் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.முதலில் 120 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது தினமும் 500 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.

கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பயணிகள் நலனை கருதி கூடுதல் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே உத்தரவு.