இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரபலம்!

Filed under: சினிமா |

“அமர்க்களம்” திரைப்படத்தின் மூலமாக அஜீத் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

திருமணமாகி 23 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அஜீத் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அதுபோல எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இல்லை. இந்நிலையில் இப்போது ஷாலினி அஜீத் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இணைந்த ஒரே நாளில் அவருக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பாலோயர்ஸ் சேர்ந்துள்ளனர்.