இப்போதைக்கு சசிகலா வெளியே வர வாய்ப்பில்லை.. ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி.

Filed under: Uncategory,அரசியல் |

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா, முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பே இல்லை என்று ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளரை சந்தித்து பேசிய நரசிம்ம மூர்த்தி சசிகலாவுக்கு விடுமுறை நாட்கள் உள்ளதா, அவர் எத்தனை நாட்கள் பரோல் மூலமாக வெளியே வந்தார் என்பது குறித்து தகவல் உரிமையறியும் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், இதற்கு எதிராக சசிகலா வைத்த கோரிக்கையை நிராகரித்து சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளதாகவும் நரசிம்ம மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 2 முறை சசிகலா பரோலில் சென்றுள்ளதாக சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளதாக நரசிம்ம மூர்த்தி தெரிவித்துள்ளார்.