இயக்குனர் பா.ரஞ்சித்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

நடிகர் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்.”

கன்னட சினிமாவில் வெற்றிப்பெற்ற “கேஜிஎப்” போன்று இத்திரைப்படமும், கோலார் தங்க வயல் உருவாகக் காரணமான தமிழர்களின் வரலாற்றைப் படத்தில் பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவிலுள்ள கடப்பாவில் தொடங்கப்பட்டது. சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இன்று இப்படத்தின் புதிய தகவலை பா ரஞ்சித் கூறியுள்ளார். அதில், இப்போதுதான் கேஜிஎபி-ல் இருந்து படக்குழு வந்திருக்கிறோம். ரொம்ப நன்றாக திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் அடுத்தக்கட்ட ஷூட்டிங் ஜனவரி மாதம் நடக்குமென்று தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.