இ-அலுவலக முறைக்கு மாற உள்ளது தமிழ்நாடு தலைமைச் செயலகம்!

Filed under: சென்னை |

இ-அலுவலக முறைக்கு முற்றிலுமாக தமிழ்நாடு தலைமைச் செயலகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மின்னணு அலுவலக முறைக்கு மாற்ற கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. தற்போது மின்னணு அலுவலக முறைக்கு மாற்றம் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக முதலமைச்சர் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட 6 துறை இ&-அலுவலகமாக மாற்றப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த அலுவலகங்களை மாற்றும் பணியை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மேற்கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.