திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தோடு மட்டுமல்லாமல் ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அபார வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுக வேட்பாளரை விட சுமார் 60000 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் திமுக வெற்றி குறித்து கருத்து கூறிய எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு பார்முலா என புதிய ஜனநாயக படுகொலையை திமுக அரங்கேற்றி உள்ளது என்றும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணநாயகத்தின் மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுக இரண்டு பிரிவாக இருந்ததால்தான் தோல்வி அடைந்துள்ளது என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.