உதயநிதி குறித்து முதலமைச்சர் பெருமிதம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றும், விளையாட்டுதுறையின் வளர்ச்சியை பார்த்து பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இன்று இந்த போட்டிகள் நிறைவு பெற்றது. இன்று நடந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய போது, “முதலமைச்சர் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் விளையாட்டுத்துறை வெற்றி பெற்றுள்ளது. அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சியை பெற்றுள்ளது. உலக விளையாட்டு வீரர்களை மட்டுமல்ல உள்ளூர் வீரர்களை சிறப்பாக நடத்துவோம் என்பதற்கு எடுத்துகாட்டு முதலமைச்சர் கோப்பை தொடர். மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் இந்திய அளவில் வெற்றிக்காக உழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.