உதயநிதி மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு!!!

Filed under: அரசியல்,தமிழகம் |

திமுகவில் பழம்பெரும் தலைவர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் முன் கைகட்டி நிற்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சிகளின் குடிநீர் திட்டத்துக்காக தாமிரபரணி ஆற்றின் நீரை கொண்டுவரும் பணியை அருப்புக்கோட்டையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”குடிநீர் கொண்டுவரும் திட்டம் 440 கோடி செலவில் தாமிரபரணியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் படிப்படியாக வளர்ந்து வந்தவர்கள். திமுகவில் மட்டுமே நேரடியாக பதவிக்கு வருகிறார்கள். சிவகாசியில் யார் தம்மை எதிர்த்து நின்றாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளேன்” என அவர் தெரிவித்தார்.