உலகின் முதல் நான்லீனியர் படம் இல்லை!

Filed under: சினிமா |

உலகில் முதன் முதலில் சிங்கிள் ஷாட்டில் நான்லீனியர் திரைப்படம் ஏற்கனவே வெளியாகி விட்டது என்று புளூசட்டை மாறம் கூறியுள்ளார்.

சமீபத்தில் பார்த்திபன் நடித்து இயக்கிய “இரவின் நிழல்” என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. இப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்று அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது “இரவின் நிழல்” படத்திற்கு முன்பே சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் வெளியாகி விட்டது என புளூசட்டை மாறன் கூறியுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு வெளியாகிய ஈரானிய திரைப்படமான ‘திவீsலீ ணீஸீபீ சிணீt’ என்ற திரைப்படம் தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்றும், இதை உலக சினிமா பத்திரிகைகள் ஏற்றுக் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே பார்த்திபன் விளம்பரம் செய்வதுபோல் உலகின் முதல் நான்லீனியர் திரைப்படம் “இரவில் நிழல்” அல்ல என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான ஆதாரங்களையும் அவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.