எலெக்ட்ரிக் நிறுவன அதிகாரி ராஜினாமா!

Filed under: உலகம் |

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

அவ்வப்போது திடீர் திடீரென ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களை பொதுமக்கள் அதிக அளவு வாங்கி வரும் நிலையில் திடீர் திடீரென நாடு முழுவதும் பேட்டரி வெடித்து தீ பிடிக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே எலெக்ட்ரிக் மோட்டார் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் ஒரு சில முக்கிய அதிகாரிகள் விலகியுள்ள நிலையில் தற்போது முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி துபே தருணும் ராஜினாமா செய்துள்ளார்.