ஜெயம் ரவி ஒரு விளம்பரத்துக்காக வாங்கிய சம்பளம் இவ்வளவா என்று சினிமா வட்டாரங்களை திகைக்க வைத்துள்ளது. பொன்னியின் செல்வனால் கிடைத்த புகழுக்கு பிறகு இவரது சம்பளம் உயர்ந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“பொன்னியின் செல்வன்” கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிட்டனர். படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனால் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு பிரபலத்தைப் பெற்றுத்தந்துள்ளது. தற்போது இப்படத்தின் கதாநாயகன் ஜெயம் ரவி, தற்போது நடித்துள்ள ஒரு விளம்பரத்துக்காக சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.