ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அபராதம் வசூல்!

Filed under: இந்தியா,தமிழகம் |

ஒரே நாளில் ஒரு ரயிலில் மட்டுமே டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததால் ஒன்றரை லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் பீகாரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

பீகாரிலிருந்து சென்னை வழியாக எர்ணாகுளம் வரை செல்லும் ரப்தி சாகர் விரைவு ரயில் நேற்று இரவு சென்னை வந்தது. அதில் பயணித்தவர்களிடம் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் பலரும் டிக்கெட் இல்லாமல் பயணித்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் சென்னையிலேயே இறக்கிவிடப்பட்டதுடன் அபராதமாக மொத்தம் ரூ.51,540 வசூலாகியுள்ளது. அதை தொடர்ந்து அந்த ரயில் புறப்பட்டு காட்பாடி செல்வதற்குள் டிக்கெட் எடுக்காமல் சென்ற மேலும் 199 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களை காட்பாடியில் இறக்கிவிட்ட அதிகாரிகள் ரூ.1,05,500 அபராதமாக வசூலித்துள்ளனர். ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்கள் அதிகரித்து வருவதால் ரயில்வே நிர்வாகம் சோதனைகள் மற்றும் அபராதங்களை கடுமையாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு ரயிலில் ஒரே நாளில் டிக்கெட் எடுக்காமல் சென்றவர்களிடம் சுமார் ரூ.1.57 லட்சம் அபராதமாக வசூலாகியுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.