ஓடிடியில் வெளியாகும் மோகன்லால் படம்!

Filed under: சினிமா |

“12th மேன்” இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மோகன்லால் மற்றும் ஜூத்து ஜோசப் கூட்டணியில் உருவான “திருஷ்யம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதையடுத்து வெளியான “திருஷ்யம் 2” திரைப்படமும் வெற்றி பெற்றது.

இவர்கள் கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “12th மேன்” திரைப்படம் உருவாகிறது. இந்த படமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மே 20ம் தேதி இந்த படம் பிரிமீயராக உள்ளது.