ஓட்டல் சாப்பாடு உங்களுகென்ன ஓசியா மீண்டும் சாப்பிட்டு பணம் தர மறுத்து திமுகவினர் அராஜகம்!

Filed under: அரசியல் |

ஓட்டல் சாப்பாடு உங்களுகென்ன ஓசியா மீண்டும் சாப்பிட்டு பணம் தர மறுத்து திமுகவினர் அராஜகம்!

திண்டுக்கல் : கொடைக்கானலில் கலையரங்கம் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்து திமுகவினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலக சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் கூடும் இடமாக கலையரங்கம் பகுதி அமைந்துள்ளது.

இங்கு சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக பல்வேறு உணவு விடுதிகள் மற்றும் பரிசு பொருட்கள் கடைகள் அமைந்துள்ளது. தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கட்சியினர் தீவிர வாகு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர் சிலர் கலையரங்கம் பகுதியில் ரூ 1060க்கு சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு 460 ம‌ட்டுமே கொடுத்துள்ள‌ன‌ர். மீதி பணம் தரமறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.