கடன்கள் முற்றிலும் தள்ளுபடி – பாஜக அதிரடி அறிவிப்பு !!

Filed under: அரசியல் |

கடன்கள் முற்றிலும் தள்ளுபடி – பாஜக அதிரடி அறிவிப்பு !!

பாஜக-வின் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். வரும் ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதற்காக என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. பா.ஜ.க ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

அதன்படி என்.ஆா். காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5 என தொகுதிகளை பங்கீடு செய்து அந்த கட்சிகள் களம் காண்கின்றன. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரியில் பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.

மொத்தம் 12 தலைப்புகளில் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதன் விபரங்கள் பின்வருமாறு…

* புதுச்சேரியில் சர்வதேச தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி முதலீடுகள் ஈர்க்கப்படும்.
*தொழில், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் செயல்பாட்டை உறுதிசெய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
*புதுச்சேரியிலுள்ள அனைத்து பஞ்சாலைகள் மற்றும் கூட்டுறவு மில்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
*புதுச்சேரி விமான நிலையம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும்.
*கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும்.
*கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
*பெண்களுக்கு மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக்கப்படும்.
*மீனவர்கள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், வீடுகளுக்கு மின் இணைப்பு விண்ணப்பித்த 15 நாட்களில் வழங்கப்படும், புதுச்சேர்க்கு தனி கல்வி வாரியம், ஆன்மீக வழிப்பாட்டுத் தலங்கள் அரசால் நிர்வாகிக்கப்படாது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பாஜாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.


மொத்தம் 50,000 பேரிடம் கருத்துக்கள் கேட்டு உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் இந்த தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி வெளியிட்டுள்ளது.