கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை!

Filed under: சென்னை |

கடந்த சில நாட்களாக சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்கப்படும் பணி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதைகளின் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த பாதை நாளை அதாவது நவம்பர் 27ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சிறப்பு பாதையை நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா போலவே விரைவில் பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதைகள் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.