கடைசி லாட்டரிக்கு அடித்த ஜாக்பாட் ரூ.33 கோடி!

Filed under: உலகம் |

கடையில் கடைசியாக இருந்த லாட்டரி சீட்டுக்கு ரூபாய் முப்பத்தி மூன்று கோடி ரூபாய் பரிசு கிடைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ச்சியாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் லாட்டரி சீட்டு வாங்க கடைக்கு சென்றபோது கடையில் கடைசியாக இரண்டே இரண்டு லாட்டரி சீட்டு மற்றும் இருந்துள்ளது. அந்த இரண்டு லாட்டரிச் சீட்டுக்களையும் அவர் வாங்கியுள்ளார். அவர் வீட்டுக்கு வந்த நிலையில் சில மணி நேரத்தில் அவருக்கு ரூபாய் முப்பத்தி மூன்று கோடி பரிசு கிடைத்ததாக தகவல் வெளியானது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் சொந்த வீடு வாங்க போவதாகவும், குடும்பத்தை நல்ல முறையில் வைத்துக் காப்பாற்ற போவதாகவும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு உதவி செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.