கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று கூட சென்னையில் நல்ல மழை பெய்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம், “இன்று மாலை மற்றும் இரவு தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று மாலை அல்லது இரவு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, ஆகிய எட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது” என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனை அடுத்து மேற்கண்ட எட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் கவனமாக தங்கள் வாகனத்தை இயக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.