கனிகா கபூர் பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுத்த மருத்துவர்கள் காரணம் என்ன?

Filed under: இந்தியா |

கனிகா கபூர் பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுத்த மருத்துவர்கள் காரணம் என்ன?

கொரோனா தொற்றில் இருந்து நீண்டநாள் சிகிச்சைக்கு பின்பு மீண்ட கனிகா கபூர் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வந்த நிலையில் ஏற்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் கடந்த மார்ச் 15 ஆம் தேதி லண்டன் சென்றுவிட்டு லக்னோ திரும்பினார்.

அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின் அவருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர் மட்டும் பாதிக்கப்படவில்லை. தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லப்பட்ட அவர் லக்னோவில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த பார்ட்டியில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவர் மகனும் நாடாளுமன்ற எம்பியுமான துஷ்யந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து கனிகா கபூர் டெல்லியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கும் மருத்துவர்களின் பேச்சைக் கேட்காமல் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையைப் பற்றி குறைக் கூறி அங்கு பிரச்சனைகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து மேலும் அவருக்கு இருவாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் குணமாகி வீடு திரும்பினார்.இதையடுத்து தற்போது அவர் கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரத்த பிளாஸ்மா தானத்தைத் தர முன்வந்துள்ளார். ஆனால் அவரது தானத்தை மருத்துவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

பிளாஸ்மா தானம் செய்பவருக்கு இருக்க வேண்டிய உடற்தகுதிகளாக ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியான நிலையிலும், உடல் எடை 50 கிலோவுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். மேலும் இதய நோய், மலேரியா, நீரிழிவு உள்ளிட்ட மருத்துவப் பிரச்சினைகளும் சம்மந்தப்பட்டவருக்கு இருக்கக் கூடாது. ஆனால் கனிகா கபூரின் குடும்ப மருத்துவ வரலாற்றில் பிரச்சனைகள் இருப்பதால் மருத்துவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து தற்போதுவரை கனிகாகபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

©TNNEWS24