கனிமொழிக்கு தமிழிசை பதிலடி!

Filed under: அரசியல்,தமிழகம் |

புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கவர்னர் தகுதி அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறார் என்றும், வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை என்று கனிமொழியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

“கவர்னர் பதவியே ஒரு காலாவதியான பதவி, ஒரு மாநிலத்திற்கு கவர்னர் இல்லாமல் இருந்தால் சட்டங்கள் உடனடியாக இயக்கப்படும்” என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். அவ்வாறு அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் கனிமொழியின் இப்பேச்சுக்கு, “தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை. கவர்னர்களை கனிமொழி விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்” என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.