கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

கன்னியாகுமரியில் வருகிற 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அறிவித்துள்ளார் அம்மாவட்ட கலெக்டர்.

வரும் 8ம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் செப்டம்பர் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அம்மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார். கேரளாவில் வருகிற 8ம் தேதி மிகவும் சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாட உள்ளன. இதையடுத்து அம்மாநிலத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8ம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை என அம்மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.