கமலாலயத்தில் அமித்ஷாவின் ஆலோசனை!

Filed under: அரசியல் |

இன்று பாஜக அலுவலகமான சென்னையிலுள்ள கமலாலயத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னையிலுள்ள பிரபல இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வந்துள்ளார். அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். தற்போது, பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வரும் 2024ம் ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பற்றி பேசியுள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.