ஊட்டச்சத்து மாதம், விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் மற்றும் கொவிட்-19 தடுப்பூசி விழிப்புணர்வு குறித்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சியை, தர்மபுரி கள விளம்பர அலுவலகம் மற்றும் கரிமங்கலம் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டம் ஆகியவை இணைந்து நாளை (09.09.2021) நடத்துகின்றன.
தர்மபுரி துணை கலெக்டர் சித்ரா விஜயன் ஐஏஎஸ், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இங்கு எல்.இ.டி. பிரச்சார வாகனத்தையும் சித்ரா விஜயன் தொடங்கி வைக்கிறார். இந்த வாகனம், தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து, ஊட்டச்சத்து மாதம், கொவிட்-19 விழிப்புணர்வு, தடுப்பூசி திட்டம் மற்றும் சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு பற்றிய வீடியோ தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும்.
கரிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரி சி.கலைச்செல்வி, இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்கிறார். மாவட்ட சுற்றுலா அதிகாரி, எஸ்.எம் ஸ்ரீபாலமுருகன், மாவட்ட தாய் சேய் நல சுகாதார அதிகாரி கே.ஈஸ்வரி, மாவட்ட சுகாதார கல்வியாளர் டி.அனுராதா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
ஆரோக்கிய குழந்தை போட்டி, ஆரோக்கிய தாய் போட்டி, சிறந்த ஊட்டச்சத்து தோட்டம், ரங்கோலி ஆகியவை இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைப்பெறும்.