கல்விக்கொள்கை பின்பற்ற தயார்!

Filed under: அரசியல் |

உயர் கல்வி அமைச்சர் பொன்முடி புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை பின்பற்ற தயார் என்று அறிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்ற தயாராக இருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் மாநில கல்வி கொள்கையையும் பின்பற்றி வருவோம். எங்கள் உணர்வுகளை கவர்னரின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். மேலும் நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை. இந்தி திணிப்பு தான் வேண்டாம் என்பதையே ஆளுநர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். சர்வதேச மொழியான ஆங்கிலம் தாய்மொழியான தமிழ் ஆகிய இரண்டு மொழிகள் தமிழகத்திற்கு போதும் என்று அவர் தெரிவித்துள்ளார்.