கல்விக் கொள்கைக்கு அரசாணை!

Filed under: சென்னை,தமிழகம் |

தமிழ்நாட்டின் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழு அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை திட்டங்களை ஏற்க முடியாது என்று கூறி வருகிறது. தற்போது சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில கல்விக் கொள்கைகளை உருவாக்க 13 பேர் கொண்டு குழு அமைக்கப்படுகிறது. நீதியரசர் முருகேசன் தலைமையிலான இந்த 13 பேர் கொண்ட குழு ஒரு ஆண்டுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும். இந்த குழுவில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரும் நியமிக்கப்பட்டுள்ளார். உலகளாவிய கல்வி, இளம் பருவத்தினருக்கான கல்வி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அறிக்கை தயாரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.