காங்கிரஸ் தலைவரின் கேள்வி!

Filed under: அரசியல்,இந்தியா |

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று பாஜக சார்பில் பிரதமராகப் பதவியேற்றார். இதையடுத்து, 17வது பாராளுமன்றத் தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணி 303 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, மோடி 2வது முறையாக பதவியேற்றார். பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு கடந்த 2.5 ஆண்டுகளில் மட்டு 13 மடங்கு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்களவையில் பேசியவர், “2014ம் ஆண்டு 50,000 கோடியாக இருந்த சொத்து மதிப்பு, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளததற்கு காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.