கார்த்தியின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Filed under: சினிமா |

நடிகர் கார்த்தி “பொன்னியின் செல்வன்” மற்றும் “சர்தார்” வெற்றிக்கு பிறகு தற்போது இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகிவரும் “ஜப்பான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டகாசமான கலர்புல் இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து உள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.